Home / Photos
PHOTOS: காமெடி நடிகர் வையாபுரியின் மகளா இது? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..
By Chandru
காமெடி நடிகர் வையாபுரியின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
1/7
Share
காமெடி நடிகர் வையாபுரியின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
2/7
Share
90ஸ் கிட்ஸின் ஃபேவரேட் காமெடி நடிகர்களின் ஒருவராக இருந்தவர் நடிகர் வையாபுரி. வடிவேலு, விவேக் போன்ற காமெடி ஜாம்பவான்கள் உலா வந்த காலத்தில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்டு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நகைச்சுவை நடிகர் தான் வையாபுரி.
3/7
Share
1993 ஆம் ஆண்டு உடன் பிறப்பு என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னர் கருத்தம்மா, அவ்வை சண்முகி, லவ் டுடே, காதலா காதலா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.
4/7
Share
அதேபோல் காமெடி ஜாம்பவான்கள் வடிவேலு மற்றும் விவேக் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து அசத்தியிருப்பார். திரைப்படம் முழுக்க வந்தாலும் சரி ஒரு சில காட்சிகளில் வந்தாலும் சரி தனது அசத்தலான நகைச்சுவையினால் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடுவார்.
5/7
Share
தொடர்ந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துக்கொண்ட வையாபுரி கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றார்.
6/7
Share
சக போட்டியாளர்களுடன் சரி சமமாக விளையாடிய வையாபுரி பின்னர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வையாபுரிக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வையாபுரிக்கு பட வாய்ப்புகளும் அதிகம் கிடைத்தது.
7/7
Share
அந்தவகையில் தற்போது தலைக்கூத்தல் மற்றும் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் காமெடி நடிகர் வையாபுரியின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் வையாபுரியின் மகளை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்காங்களா? என்று ஆச்சரியத்துடன் புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications