bredcrumb

PHOTOS : மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நடிகர்கள் யார் யாருன்னு தெரியுமா?

By Chandru
| Published: Wednesday, November 16, 2022, 12:15 [IST]
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் பலர் தங்களின் ரசிகர்களை கவரும் வகையில் விதவிதமான வித்தியாசமான கதாபாத்திரம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.அந்தவகையில் கமல், ரஜினி போன்ற டாப் நடிகர்கள் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
PHOTOS : மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நடிகர்கள் யார் யாருன்னு தெரியுமா?
1/8

2/8
குறிப்பாக நடிகர் கமல் 'தசாவதாரம்' படத்தில் 10 வகையான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார்.அதேபோல் நடிகர் விக்ரம் 'ஐ' படத்தில் இரண்டு வகையான உடல் தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.பெரும்பாலான தமிழ் நடிகர்கள் தங்களின் தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். 

PHOTOS : மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நடிகர்கள் யார் யாருன்னு தெரியுமா?
3/8
முன்னணி நடிகர்கள் தங்களின் ஸ்டைலான தோற்றத்தை படங்களில் வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் காட்டுவார்கள்.அந்தவகையில் சில நடிகர்கள் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சில துணிச்சலான கதாபாத்திரத்திலும் நடிப்பது உண்டு.இந்நிலையில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நடிகர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

PHOTOS : மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நடிகர்கள் யார் யாருன்னு தெரியுமா?
4/8
சூர்யா : 2004 ஆம் ஆண்டு இயக்குனர் சசி ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'பேரழகன்'.இப்படத்தில் சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இப்படத்தில் சூர்யா டூயல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இதில் ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. 

PHOTOS : மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நடிகர்கள் யார் யாருன்னு தெரியுமா?
5/8
உதயநிதி ஸ்டாலின் : தொடர்ந்து காதல் மற்றும் காமெடி படங்களில் நடித்து வந்த உதயநிதி இயக்குநர் மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.மேலும் கூடுதல் சர்ப்ரைஸாக இப்படத்தில் உதயநிதி கண் தெரியாதவராக நடித்து ஆச்சரியப்படுத்தினார்.இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி என பலர் நடித்துள்ளனர். 

PHOTOS : மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நடிகர்கள் யார் யாருன்னு தெரியுமா?
6/8
கமல் : உலகநாயகன் கமலஹாசன் தனது சினிமா பயணத்தில் பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.ஆனால் இவர் நடித்த 'அப்பு' என்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரம் பலரையும் அழவைத்தது என கூறலாம்.'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் 'அப்பு' கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கமல் இப்படம் முழுக்க மாற்றுத்திறனாளியாகவே நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். 

PHOTOS : மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நடிகர்கள் யார் யாருன்னு தெரியுமா?
7/8
அஜித் : 2002 ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் 'வில்லன்'.இப்படத்தில் அஜித், மீனா, கிரண் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இப்படத்தில் நடிகர் அஜித் டூயல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இரண்டு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்து அஜித் ஆச்சரியப்படுத்தினார். 

PHOTOS : மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நடிகர்கள் யார் யாருன்னு தெரியுமா?
8/8
பிரபு தேவா : குழந்தை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் 'பொய்க்கால் குதிரை'.இப்படத்தில் நடிகர் பிரபு தேவா ஹீரோவாக நடிக்க இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.ஒரு விபத்தில் தனது இடது காலை இழந்த மாற்றுத்திறனாளியாக இப்படத்தில் பிரபு தேவா நடித்துள்ளார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X