Home / Photos
PHOTOS : வெப் தொடரில் என்ட்ரி கொடுத்த விருமாண்டி பட நடிகை.. செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
By Chandru
தமிழ் சினிமாவில் தற்போது வெப் தொடர்களுக்கு செம மவுசு உள்ளது. வெப் தொடர்கள் பிரபலமானதற்கு முக்கிய கரணம் இந்த கொரோனா தான். கொரோனா வந்தாலும் வந்தது திரைப்படங்களை விட ஓடிடி தொடர்களுக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது.
1/8
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் தற்போது வெப் தொடர்களுக்கு செம மவுசு இருந்து வருகிறது. வெப் தொடர்கள் பிரபலமானதற்கு முக்கிய காரணம் இந்த கொரோனா தான். கொரோனா வந்தாலும் வந்தது திரைப்படங்களை விட ஓடிடி தொடர்களுக்கு ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
2/8
Photo Credit: instagram
Share
நெட்பிலிக்ஸ், அமேசான், ஆஹா, ஜீ 5 என ஏகப்பட்ட ஓடிடி தளங்கள் இணையத்தில் வலம் வருகிறது. பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் இந்த ஓடிடி தளத்தில் இருந்தால் சினிமா ரசிகர்கள் தியேட்டருக்கு போவார்களா.. மேலும் தியேட்டர்களில் வெளியாகும் மாஸ் ஹீரோ படங்கள் சில நாட்களிலே ஓடிடியில் வெளியிடப்படுகிறது.
3/8
Photo Credit: instagram
Share
தியேட்டர்களில் 3 மணி நேரத்தை செலவிடுவதை விட வீட்டில் ஹாய்யாக படுத்துக்கொண்டு ஓடிடியில் படம் பார்ப்பதை பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில் திரைப்பட தயாரிப்பு நிறுவங்களும் பெரும்பாலும் ஓடிடி தளத்தையே விரும்புகின்றனர். வரும் நாட்களில் தியேட்டர்களுக்கான தேவை பெருமளவு இருக்காது என்ற கருத்தும் இருந்து வருகிறது.
4/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் 2011 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. தனது முதல் படத்தில் வெற்றி கண்ட அபிராமி, தொடர்ந்து தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.
5/8
Photo Credit: instagram
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் கலக்கிய அபிராமி, நடிகர் கமல் நடிப்பில் வெளியான 'விருமாண்டி' திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். பட்டித்தொட்டி எங்கும் செம ஹிட்டான விருமாண்டி படத்திற்கு பின் அபிராமிக்கு சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
6/8
Photo Credit: instagram
Share
தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அபிராமி தற்போது வெப் தொடரில் களம் இறங்கியுள்ளார். இனி எல்லாம் ஓடிடி தான் என்று தெரிந்துகொண்ட அபிராமி 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி' என்ற த்ரில் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram
Share
காணாமல் போகும் மாணவி ஏரியில் பிணமாக கிடைக்க, அவரை கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதே இந்த வெப் தொடரின் கதையாகும். இதை பற்றி அபிராமி கூறியபோது, நான் நடித்த முதல் வெப் தொடர் இதுவாகும். எனக்கு த்ரில் கதைகள் பிடிக்கும், இதுவும் இதுபோன்ற கதையம்சத்தில் தயாராகியுள்ளது என கூறியுள்ளார்.
8/8
Photo Credit: instagram
Share
ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவும் இந்த வெப் தொடரை விஷால் வெங்கட் இயக்க, ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, சுதர்சன் என். குமார் இசையமைத்துள்ளார். தற்போது 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி' வெப் தொடர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இது ஒரு த்ரில் தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications