Home / Photos
நடிகை அதிதி பாலனா இது? ட்ரெண்டாகும் ரீசென்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
அருவி பட நடிகை அதிதி பாலனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி கலக்கி வருகின்றன.
1/7
Photo Credit: Instagram
Share
அருவி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். இவர் நடித்த முதல் படத்திலேயே அத்தனை வரவேற்பை பெற்றார். மக்களிடையே அந்த கதாபாத்திரத்தை சரியாய் கொண்டு சேர்த்தார்.
2/7
Photo Credit: Instagram
Share
அதிதி பாலன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை. இவர் நடனக் கலைஞர் மற்றும் மாடல் ஆவார். அருவி திரைப்படத்தில் அருவியாக நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.
3/7
Photo Credit: Instagram
Share
சென்னையில் சட்டப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் என்னை அறிந்தால் (2015) திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். நெட்பிலிக்ஸிஸ் வெளியான குட்டி ஸ்டோரி ஒரு அத்தியாயத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.
4/7
Photo Credit: Instagram
Share
அதிதி பாலன் மலையாளத்தில் வெளியான கோல்ட் கேஸ் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஒரு நிருபராக நடித்துள்ளார். அமானுஷங்கள் நிறைந்த காட்சிகளுடன் அதை கண்டுபிடிக்கும் காட்சிகளிலும் அருமையாக நடித்துள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
இந்த படத்தின் வெற்றி காரணமாக அந்த சமயத்தில் இரண்டாவது பாகம் வருமா என்றெல்லாம் எதிர்பார்க்க பட்டது. அதிதி அதன் பிறகு சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் படத்தில் நடித்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
அருவி படத்தில் நடித்ததற்காக கிட்டத்தட்ட 7 விருதுகளை பெற்றார். அதிதி நடித்து வெளி வர 2 படங்கள் காத்திருக்கின்றன. மலையாளத்தில் ஒரு படமும், தமிழில் ஒரு படமும் விரைவில் வெளி வரும் என எதிர்பார்க்க படுகிறது
7/7
Photo Credit: Instagram
Share
தனது நடிப்பால் நீண்ட வசனங்களை பேசி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர், அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் இவர் சமீபத்தில் இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications