Home / Photos
அஞ்சலிக்கு 40 வயசு ஆச்சா? கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கிளிக்ஸ்!
By Chandru
நடிகை அஞ்சலி, கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@anjali
Share
தெலுங்கு சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை அஞ்சலி. அதன்பின்னர் ராம் இயக்கத்தில் வெளிவந்த ஜீவா நடித்த 'கற்றது தமிழ்' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/7
Photo Credit: instagram@anjali
Share
'அங்காடி தெரு' திரைப்படம் இவரை மிகவும் பிரபலமாகியது. சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த அஞ்சலிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
3/7
Photo Credit: instagram@anjali
Share
தொடர்ந்து வெவ்வேறு ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நடித்து வருகிறார்.
4/7
Photo Credit: instagram@anjali
Share
தமிழில் இவர் இறுதியாக நடித்த திரைப்படம் ராம் இயக்கத்தில் வெளிவந்த 'பறந்து போ'. அதன் முன்னரும், பின்னரும் பிற தென்னிந்திய படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். மீண்டும் எப்போது தமிழ் திரையில் தென்படுவார் என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது.
5/7
Photo Credit: instagram@anjali
Share
தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ள இவர், கடந்த 16ம் தேதி மிகவும் சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
6/7
Photo Credit: instagram@anjali
Share
தற்போது ஈகை, மகுடம், ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் மலையாளத்தில் 'ஒரு பெருங்களியாட்டம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram@anjali
Share
இந்த நிலையில் தற்போது இவர், சிம்பிளாக கேக் வெட்டி 40வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications