கண்ணாடி கதவில் சாய்ந்து மார்க்கமாய் போஸ் கொடுத்து ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்து பாப்புலரான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.அதற்கு பிறகு தெலுங்கில் பிஸியான அனுபமா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழில் தள்ளி போகாதே படத்தில் நடித்து வருகிறார்.மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களின் பிரேமம் படத்தில் சிறந்த புதுமுக நடிகைக்கான ஏசியநெட் ஃபிலிம் விருதுகள், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றார். கொடி படத்தில் நடித்ததற்காக தமிழில் சிறந்த துணை நடிகை விருதினை வென்றார் அனுபமா பரமேஸ்வரன்.மலையாளம், தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து, முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் அனுபமா.