Home / Photos
PHOTOS: அடிபொலி.. கேரளா சேலையில் ரசிகர்களை சுழட்டி போட்ட நடிகை பானு.. லேட்டஸ்ட் படங்கள் இதோ!
By Chandru
'தாமிரபரணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பானு. தற்போது பானுவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
1/8
Photo Credit: instagram
Share
'தாமிரபரணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பானு. தற்போது பானுவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
2/8
Photo Credit: instagram
Share
2007 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், பானு, பிரபு, நதியா, நாசர் உட்பட பல முன்னணி பிரபலங்களில் நடிப்பில் வெளியான படம் 'தாமிரபரணி' . இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானது.
3/8
Photo Credit: instagram
Share
இப்படத்தில் விஷலுக்கு ஜோடியாக நடிகை பானு நடித்திருப்பார். கேரளாவை சேர்ந்த பானு, மலையாள சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் கதாநாயகியை நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் இவரை முக்தா என்றும் தமிழில் பானு என்று அழைக்கப்படுகிறார்.
4/8
Photo Credit: instagram
Share
மலையாளத்தில் கலக்கிய பானு தமிழில் தாமிரபரணி படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். இப்படம் இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது. முதல் படத்திலேயே பானுவின் அழகில் மயங்கிய ரசிகர்களை குஷிப்படுத்தது தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
5/8
Photo Credit: instagram
Share
பல படங்களில் பிஸியாக இருந்த பானுவுக்கு ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. இனி தமிழில் வேலைக்கு ஆகாது என மீண்டும் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.
6/8
Photo Credit: instagram
Share
தமிழில் இவர் இறுதியாக 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அசத்திய பானு, தொழிலதிபர் ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கியாரா என்ற மகள் உள்ளார்.
7/8
Photo Credit: instagram
Share
திருமணத்திற்கு பின் திரையில் அதிகளவு தென்படாத பானு, விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வேலம்மாள் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சினிமாவில் இன்ட்ரெஸ்ட் காட்டாத பானு, சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கலர்புல் உடைகளில் விதவிதமான போட்டோஷூட் செய்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது பானுவின் லேட்டஸ்ட் படங்கள் அதிக லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications