Home / Photos
திருமணமாகி இத்தனை வருடங்களா! வித விதமாக கணவருடன் புகைப்படம் வெளியிட்ட சீரியல் நடிகை!
By Divya Bala
தொலைக்காட்சியில் நடிகையாக அறிமுகமாகி கலக்கி வரும் நடிகை சைத்ரா தனது திருமண நாளை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
1/7
Photo Credit: Instagram
Share
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சைத்ரா ரெட்டி.
2/7
Photo Credit: Instagram
Share
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சைத்ரா, 'அவனு மேட்டே ஷ்ரவாணி' என்ற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்.
3/7
Photo Credit: Instagram
Share
அதன் பின்னர் தமிழ் சீரியலுக்கு வந்த சைத்ரா, ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' தொடரின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
4/7
Photo Credit: Instagram
Share
அறிமுகமான முதல் சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த சைத்ரா, இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மிகவும் பிரபலமானார். சீரியலில் கலக்கிய சைத்திராவுக்கு வெள்ளைத்திரையில் வாய்ப்பு கிடைத்து.
5/7
Photo Credit: Instagram
Share
இதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'எனெண்டு ஹெசரிடலி' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழிலும் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.
6/7
Photo Credit: Instagram
Share
இப்படியாக சின்னத்திரை ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வரும் சைத்ரா ரெட்டி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'கயல்' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
நம்பர் ஒன் சீரியலாக இருக்கும் கயல் சீரியலில் கதாநாயகியாக கலக்கும் சைத்ரா, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவர் தனது 4வது திருமணநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications