வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருந்தாலும், சுந்தரி சீரியல் தான் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 2021ல் தொடங்கிய இத்தொடர் தற்போது நிறைவடைந்துள்ளது.
தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் கேப்ரியல்லா, சமீபமாக மாடர்ன் லுக்கில் புகைப்படங்களை பதிவிட்டும் வந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.
ஒளிப்பதிவாளர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், தற்போது தாயாகியிருக்கிறார். கர்ப்பம் தொடர்பான அறிவிப்பையும், நடிப்பிலிருந்து ஓய்வையும் சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.
தற்போது மீண்டும் போட்டோஷூட்களில் கவனம் செலுத்தி வரும் கேபி, தற்போது கருப்பு நிற டீ ஷிர்டில் கேசுவலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.