Home / Photos
அஜித்தின் 'காதல் கோட்டை' பட நடிகையை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
By Chandru
நடிகை ஹீரா ராஜகோபாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
1/7
Share
90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹீரா ராஜகோபால். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஸ்டார் நடிகையாக வலம் வந்து ஹீரா தற்போது எப்படி இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2/7
Share
கடந்த 1984ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்து தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை ஹீரா ராஜகோபால். அதன்பின்னர் தமிழில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் கதிரின் இயக்கத்தில் நடிகர் முரளி நடிப்பில் வெளியான 'இதயம்' படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/7
Share
இப்படம் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று ஹிட் படமானது. இதன் மூலம் ஹீரா மிகவும் பிரபலமானார், ரசிகர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் இவரை நோட் செய்ய ஆரம்பித்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.
4/7
Share
நீ பாதி நான் பாதி, அன்றும் அன்புடன், தசரதன், முன் அறிவிப்பு, சபாஷ் பாபு என தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் ஹீராவின் மவுசு அதிகமானது.
5/7
Share
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தது. ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் செம்ம பிஸியாக நடித்து வந்தார். பாலிவுட் உட்பட தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் நடிகையாக வலம் வந்து இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார்.
6/7
Share
அதன்பின்னர் அஜித்தின் 'காதல் கோட்டை' படத்தில் நடித்து மக்களை அதிகம் ஈர்த்தார். அதேபோல் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படத்தில் கமலை ஒன் சைடாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து மக்களை அதிகம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
7/7
Share
இப்படியாக பல மொழி படங்களில் கலக்கி வந்த ஹீரா, 2002ம் ஆண்டு புஷ்கர் மாதவ் நட்டு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் திரைப்படங்களில் இருந்து டோட்டலாக விலகிக்கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது 52 வயதாகும் ஹீராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications