வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான இந்துஜா சமூகவலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட இது தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்துஜா ரவிச்சந்திரன் குறும்படங்களில் தொடங்கி, மேயாத மான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவனம் பெற்றார்.முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர், தொடர்ந்து பல படங்களில் முக்கிய மற்றும் செகண்ட் ஹீரோயின் கதாபாத்திரங்களில் நடித்தார்.பிகில் படத்தில் கால்பந்து வீராங்கணையாக நடித்தது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.அதன்பிறகு பார்க்கிங், நானே வருவேன் உள்ளிட்ட படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.பல படங்களில் பிஸியாக இருக்கும் அவர், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஸ்டன்னிங் லுக்கில் உள்ள புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.