90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. மும்பையை சேர்ந்த ஜோதிகா பாலிவுட் மூலம் தொடங்கி, வாலி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி விரைவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.அஜித், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.சூர்யாவுடன் காதலில் இணைந்த இவர், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு தியா, தேவ் என இரண்டு குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையை கவனித்தார்.சுமார் 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே மூலம் ரீ-என்ட்ரி கொடுத்து, தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.தற்போது ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி, போட்டோஷூட்கள் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.