Home / Photos
PHOTOS: 'கரகாட்டக்காரன்' கனகாவா இது..? உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் எப்படி மாறிட்டாங்க.. ட்ரெண்டிக்கிங் போட்டோஸ்!
By Chandru
நடிகை கனகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரை துறையினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
1/10
Share
நடிகை கனகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரை துறையினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
2/10
Share
இயக்குநர் கங்கை அமரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜன், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் கரகாட்டக்காரன். அப்படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கனகா.
3/10
Share
தமிழில் அறிமுகமான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அப்படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமாகிவிட்டார் கனகா. தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள் கனகா. வாரிசு நடிகையாக தமிழில் என்று கொடுத்த கனகாவுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
4/10
Share
கரகாட்டக்காரன் மெகா வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார் நடிகை கனகா. தொடர்ந்து ரஜனி, பிரபு, கார்த்திக், அர்ஜுன், முரளி, பாண்டியராஜன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
5/10
Share
தமிழில் கொடிக்கட்டி பறந்த கனகா தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் கிடைத்த வரவேற்பை போல பிற மொழி படங்களிலும் கனவுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
6/10
Share
ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த கனகா கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான விரலுக்கு ஏத்த வீக்கம் என்ற படத்தில் இறுதியாக நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து எங்கு போனார் என்றே தெரியவில்லை, படங்களிலும் நடிக்கவில்லை, பொதுவெளியிலும் தென்படவில்லை.
7/10
Share
இதனால் நடிகை கனகா இறந்துவிட்டார் என்றெல்லாம் சலசலப்புகள் கிளம்பியது. பொதுவாழ்க்கையில் இருந்தும், சினிமாவில் இருந்தும் தனிமைப் படுத்துக்கொண்டு கனகா எப்படி இருக்கிறார் என்று திரை பிரபலங்களும், ரசிகர்களும் தேடியது உண்டு.
8/10
Share
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வந்த கனகா பொது நிகழ்ச்சி, சினிமா இவற்றில் இருந்து விலகியதற்கு காரணம் அவரின் உறவினர்கள் தான் என்று கூறுகின்றனர். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை, காதல் தோல்வி என இதனாலே பல வருடங்களாக தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.
9/10
Share
இந்த நிலையில் நடிகை குட்டி பத்மினி தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில், நடிகை கனகாவுடன் எடுத்த புகைப்படத்தை நடிகை குட்டி பத்மினி பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications