'நாயகன்' பட கமலுக்கு மகளா நடுச்சவங்களா இவங்க? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
நடிகை கார்த்திகாவின் சமீபத்திய புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் நாயகன். இப்படத்தில் கமலுக்கு மகளாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கார்த்திகா.
இயக்குநர் பாஷீல் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான பூவிழி வாசலிலே என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அப்படத்திற்கு பின்னர் இரண்டாவது படமே கமலுக்கு மகளாக நடித்து அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்தார். அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
நாயகன் படத்தில் தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்திய கார்த்திகாவுக்கு தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
தமிழில் அறிமுகமாவதற்கு முன்னர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நாயகன் படத்திற்கு பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் மலையாளத்துக்கே சென்றுவிட்டார்.
மலையாள சினிமாவில் பிஸியாக இருந்த கார்த்திகா, கடந்த 1988ம் ஆண்டு குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் டோட்டலாக சினிமாவில் இருந்து விலகிக்கொண்டார்.
சினிமாவில் தலையைக் காட்டாத கார்த்திகா, இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை வாங்கி வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications