Home / Photos
திண்டுக்கல் சாரதி பட ஹீரோயினை நியாபகம் இருக்கா? உடல் எடை கூடி ஆளே மாறிட்டாங்களே! யாருன்னு பாருங்க!
By Chandru
நடிகர் கருன்ஸ் நடிப்பில் வெளியான திண்டுக்கல் சாரதி படத்தில் ஹீரோயினாக நடித்த கார்த்திகா மேத்யூவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/8
Share
நடிகர் கருன்ஸ் நடிப்பில் வெளியான திண்டுக்கல் சாரதி படத்தில் ஹீரோயினாக நடித்த கார்த்திகா மேத்யூவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2/8
Share
தமிழ் சினிமாவில் இருந்து டோட்டலாக விலகிய சினிமா நடிகைகளின் சமீபத்திய புகைப்படங்களை நாம் பார்த்து வருகிறோம். இதில் சில நடிகைகள் கணவர், குழந்தை என வெளிநாடுகளில் சேடலாகிவிட்டனர். மேலும் சிலர் குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்துகொண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். அந்தவகையில் மலையாள நடிகை கார்த்திகா மேத்யூவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
3/8
Share
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கார்த்திகா மேத்யூ. 2001ம் காசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் இருந்து தனது திரை பயணத்தை ஆரம்பித்த கார்த்திகா தொடர்ந்து மலையாளத்தில் ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், ஹீரோயினாகவும் நடித்து வந்தார்.
4/8
Share
மலையாளத்தில் அமோக வரவேற்பு கிடைத்த கார்த்திகாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. இதன் மூலம் என் மன வானில், சரத்குமாரின் நம் நாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் ரசிகர்கள் இடையே சொல்லும் அளவிற்கு கார்த்திகா ரீச் ஆகவில்லை.
5/8
Share
அதன்பின்னர் கடந்த 2008ம் ஆண்டு நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான திண்டுக்கல் சாரதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். இப்படத்தின் மூலம் கார்த்திகா யார் என்பதை ரசிகர்கள் தெரிந்துகொண்டார்.
6/8
Share
இப்படம் நல்ல ரீச் கொடுத்த நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது. தொடர்ந்து நாளை நமதே, ஆறுமணமே, பாலைவன சோலை, மகிழ்ச்சி, புலன் விசாரணை 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் திண்டுக்கல் சாரதி படத்தில் கிடைத்த வரவேற்பு வேறு எந்த படத்திலும் கிடைக்கவில்லை.
7/8
Share
தமிழ் மற்றும் மலையாளத்தில் கலக்கிய கார்த்திகா, கடந்த 2009ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமாகிவிட்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து டோட்டலாக விலகிக்கொண்டார் கார்த்திகா. அதன்பின்னர் ஒரு படங்களில் கூட நடிக்கவில்லை.
8/8
Share
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் அமெரிக்காவில் செட்டிலான கார்த்திகாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்ப வாழ்க்கையை ஜாலி பண்ணும் கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது கார்த்திகாவின் குடும்ப போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications