Home / Photos
பட ப்ரோமோஷனை தொடங்கிய கீர்த்தி.. ஸ்டைலிஷ் லுக்கில் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பட ப்ரோமஷனிற்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக திகழும் கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
2/5
Photo Credit: Instagram
Share
ரஜினி முருகன் வெற்றிக்குப் பிறகு, தொடரி, ரெமோ, பைரவா போன்ற ஹிட் படங்களில் நடித்துக் கொண்டு தமிழ் சினிமாவில் தனது நிலையை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ், ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி, பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் முக்கியமான வாய்ப்புகளைப் பெற்றார்.
3/5
Photo Credit: Instagram
Share
நீனு லோக்கல் மூலம் தெலுங்கில் வெற்றிப் படம் கொடுத்த கீர்த்தி சுரேஷ், பின்னர் வெளியான மகாநடி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பெரும் புகழைப் பெற்றார். அந்த படம் மட்டுமல்ல, அதில் நடித்ததற்காக அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் கைப்பற்றினார்.
4/5
Photo Credit: Instagram
Share
வசூலும் விமர்சனமும் கைப்பற்றிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தனது சிறுவயது நண்பர் ஆண்டனியுடன் திருமணம் செய்து கொண்டு, இப்போது இனிய குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது ஸ்டன்னிங் லுக்கில் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். அதற்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications