Home / Photos
PHOTOS: 43-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கிரண்.. இவரின் சொத்து மதிப்பு எவ்வளவுன்னு பாத்தீங்களா?
By Chandru
actress kiran celebrating her 43rd birthday. lets see her total net worth here.
1/8
Photo Credit: instagram
Share
90ஸ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். இன்று இவர் தனது 43-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டுகிறார். ரசிகர்கள், பிரபலங்கள் கிரணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இளைஞர்களை ஈர்த்த கிரணின் மொத்த சொத்து மதிப்பு என்ன என்பதை பார்ப்போம்.
2/8
Share
கடந்த 2002ம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அறிமுகமான முதல் படமே கிளாமர் காட்டி நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்தார். தனது முதல் படத்திலேயே மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டவர் கிரண்.
3/8
Share
அதன்பின்னர் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் நடித்தார். தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்த கிரணுக்கு ரசிகர்கள் கூட்டமும் நாளுக்குநாள் பெருகியது.
4/8
Share
தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ’திருப்பாச்சி’, அஜித்துடன் வில்லன், காதல் மன்னன் பிரசாந்துடன் வின்னர், விஜயகாந்துடன் தென்னவன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
5/8
Share
ஏகப்பட்ட படங்களில் கதாநாயகியாக கலக்கிய கிரண் சில படங்களில் ஐட்டம் டான்ஸும் ஆடியுள்ளார். கதாநாயகியாக கிளாமரில் தாராளம் காட்டிய கிரணுக்கு தமிழில் மவுசு அதிகமானது. படத்தில் ஹீரோயினாக இல்லாவிட்டாலும் ஐட்டம் டான்ஸ் மூலமாகவும் ரசிகர்களை ஈர்த்து வர தொடங்கினார்.
6/8
Share
தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து தென்னிந்தியாவின் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் இளமை ஊஞ்சல் என்ற படமாகவும் அதன் நடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டார்.
7/8
Share
திரைப்படங்களில் இருந்து விலகிய கிரண் இன்ஸ்டாகிராமில் தனது கிளாமரை காட்ட தொடங்கினார். சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் கிரண் அடிக்கடி கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படத்தை போஸ்ட் செய்து வருகிறார். அதில் பெரும்பாலும் புகைப்படங்கள் பிகினி உடையிலே இருக்கும்.
8/8
Share
இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடும் கிரணுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சரி பர்த்டே பேபியின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும்? 90ஸ் முதல் 20ஸ் வரை முன்னணி நடிகர்களுடன் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கும் கிரணின் சொத்து மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் லட்சங்களில் சம்பாரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications