Home / Photos
PHOTOS: பீச் பேபியாக மாறிய கிரண்.. லேட்டஸ்ட் போட்டோவை பாத்தீங்களா?
By Chandru
actress kiran latest instagram photos. check out her latest photos here.
1/7
Photo Credit: instagram
Share
இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அறிமுகமான முதல் படமே செம ஹிட்டானது, தமிழ் ரசிகர்களை தனது அழகினால் ஆச்சரியப்படுத்தினார்.
2/7
Photo Credit: instagram
Share
அதன்பின்னர் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த கிரண் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வர தொடங்கினார்.
3/7
Photo Credit: instagram
Share
தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ’திருப்பாச்சி’, அஜித்துடன் வில்லன், காதல் மன்னன் பிரசாந்துடன் வின்னர், விஜயகாந்துடன் தென்னவன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
4/7
Photo Credit: instagram
Share
ஏகப்பட்ட படங்களில் கதாநாயகியாக கலக்கிய கிரண் சில படங்களில் ஐட்டம் டான்ஸும் ஆடியுள்ளார். போக போக கிரண் கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்து கவர்ச்சி நடிகையாகவே மாறிவிட்டார். பெரும்பாலான படங்களில் அதிக கவர்ச்சி காட்டி ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களையும் ஏங்கவைத்தவர்.
5/7
Photo Credit: instagram
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து தென்னிந்தியாவின் கவர்ச்சி நடிகையாக கிராம் வலம் வந்தார். தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் இளமை ஊஞ்சல் என்ற படமாகவும் அதன் பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்துவந்தார்.
6/7
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் கிரண் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது கிரண் கடகரையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் ஏகப்பட்ட லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.
7/7
Photo Credit: instagram
Share
பட வாய்ப்புகளை இல்லாத கிரண் சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கினார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து பட வாய்ப்புகளை ஈர்க்க முயற்சித்து வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications