Home / Photos
ஜொலி ஜொலிக்கும் க்ரித்தி ஷெட்டி.. லெஹெங்கா, நெக்லஸ் விலை லட்சங்களா?
By Divya Bala
நடிகை க்ரித்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் சேதுபதியுடன் நடித்த தெலுங்கு திரைப்படமான உப்பெண்ணா மூலம் கதாநாயகியாக அறிமுகமான க்ரித்தி ஷெட்டி, முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், பல விருதுகளையும் வென்றார்.
2/5
Photo Credit: Instagram
Share
அதைத் தொடர்ந்து ஷ்யாம் சிங் ராய், தி வாரியர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த க்ரித்தி, தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தமிழில் மூன்று புதிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
3/5
Photo Credit: Instagram
Share
இதற்கிடையில், நீல நிற காஞ்சீவரம் டிஷ்யூ லெஹெங்காவில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாரம்பரியமும், நவீனமும் கலந்த அவரது இந்த லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
4/5
Photo Credit: Instagram
Share
தூய காஞ்சீவரம் டிஷ்யூ சில்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லெஹெங்காவின் விலை ரூ.1.26 லட்சம் என கூறப்படுகிறது. பல அடுக்குகள் கொண்ட ஸ்கர்ட், கைவேலைப்பாடுகள் நிறைந்த டியூல் பிளவுஸ் மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்ட டியூல் துப்பட்டா இந்த உடைக்கு மேலும் ராயல் தோற்றத்தை கொடுக்கின்றன.
5/5
Photo Credit: Instagram
Share
இந்த லெஹெங்காவுடன் க்ரித்தி ஷெட்டி அணிந்திருந்த வைர நெக்லஸின் மதிப்பும் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. விலை உயர்ந்த இந்த ஃபேஷன் காம்போ தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications