Home / Photos
ஒரு காலத்தில் பாலிவுட் குயின்.. ஆளே மாறிய முதல்வன் பட ஹீரோயின்.. யார்? எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்களா?
By Chandru
நடிகை மனிஷா கொய்ராலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/8
Photo Credit: filmibeat
Share
நேபாளத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் நேபாளத்தின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2/8
Photo Credit: instagram@manisha koirala
Share
அரச குடும்பத்தை சேர்ந்த இவர், சினிமாவில் ஆர்வம் கொண்டு 1989ம் ஆண்டு ரொமான்டிக் நேபாளம் படம் ஒன்றில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கினார். பின்னர் 1991ல் திலீப் குமார், ராஜ் குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த 'Saudagar' என்ற படத்தில் நடித்து பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/8
Photo Credit: instagram@manisha koirala
Share
வெவ்வேறு ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவர், மணிரத்னம் இயக்கத்தில் 1994ல் வெளிவந்த 'பாம்பே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படமே இவரை மிகவும் பிரபலமாகியது.
4/8
Photo Credit: instagram@manisha koirala
Share
பாம்பே படம் செம ஹிட்டானதை தொடர்ந்து உயிரே, இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
5/8
Photo Credit: instagram@manisha koirala
Share
தமிழில் மட்டுமல்லாமல் பான் இந்தியா அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் கொண்டிருந்த இவர், 2010ல் காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி வெறும் இரண்டே ஆண்டுகள் ஆன நிலையில் 2012ல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டார்.
6/8
Photo Credit: instagram@manisha koirala
Share
புற்றுநோய் பாதிக்கப்பட்டதில் இருந்து மனிஷாவின் வாழ்க்கையே மாறிவிட்டது என்று சொல்லலாம். உடல் மெலிந்து ஆளே மாறிவிட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் உடல்நலம் தெரிய இவர், தற்போது சினிமாவில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளார்.
7/8
Photo Credit: instagram@manisha koirala
Share
சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், அவ்வப்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்தவது வழக்கம். அப்படியாக சமீபத்தில் இவர் பகிர்ந்து போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
8/8
Photo Credit: instagram@manisha koirala
Share
அந்த வகையில் மனிஷாவின் தலைமுடி நரைத்து, உடல் மெலிந்து ஆளே டோட்டலாக மாறிப்போய் காட்சியளிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஒருகாலத்தில் பாலிவுட் குயினாக இருந்த நிலையில் தற்போது இவரின் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications