Home / Photos
சுடிதாரில் கலக்கல் போஸ்.. 'ஜெயிலர்' பட நாயகியின் தீபாவளி க்ளிக்ஸ்!
By Divya Bala
ஜெயிலர் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிர்னா மேனன். இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
1/7
Photo Credit: Instagram
Share
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் நடிகை மிர்னா. தற்போது மிர்னாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் வருகிறது.
2/7
Photo Credit: Instagram
Share
கடந்த 2020 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘பிக் பிரதர்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரை துறையில் அறிமுகமானவர் நடிகை மிர்னா. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.
3/7
Photo Credit: Instagram
Share
தெலுங்கில் ‘கிரேஸி பெல்லோ’, ‘உக்ரம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் ஆஹா தமிழில் என்ற ஓடிடி தலத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மிர்னா அறிமுகமானார்.
4/7
Photo Credit: Instagram
Share
இதைத்தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான ரஜினியின் மருமகளாக நடித்து அசத்தியுள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
சிறு சிறு கதாபாத்திரத்தில் தலையை காட்டிய மிர்னாவுக்கு மிக பெரிய ஜாக்பாட் படமாக ஜெயிலர் திரைப்படம் அமைந்தது. இப்படம் வெளியாகி சுமார் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
6/7
Photo Credit: Instagram
Share
இப்படத்தின் மூலம் மக்களின் மனதை கொள்ளையடித்த மிர்னாவுக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அடுத்தடுத்து தமிழ் படங்களில் பிஸி நடிகையாக நடித்து வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் மிர்னா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் மிர்னா சுடிதாரில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து இணையத்தை கலக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications