Home / Photos
ஆமைக்கே டஃப் கொடுக்குறாங்களே! குடும்பமாக வியட்நாமில் வைப் பண்ணும் மைனா நந்தினி!
By Divya Bala
வெண்ணிலா கபடி குழு படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை நந்தினி. இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
மைனா நந்தினி இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘வம்சம்’ திரைப்படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தார். “மலரு புள்ள” என்ற வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
2/5
Photo Credit: Instagram
Share
இந்த கதாபாத்திரம் அவருக்கு திரையுலகில் நல்ல அறிமுகத்தை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வெள்ளைக்காரத்துரை’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘காஞ்சனா 3’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
திரைப்படங்களுடன் சின்னத்திரையிலும் மைனா நந்தினி தனது தடத்தை பதித்தார். ‘சரவணன் மீனாட்சி 3’ தொடரில் மடோனா கதாபாத்திரம் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
4/5
Photo Credit: Instagram
Share
அதனைத் தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘அரண்மனை கிளி’, ‘சின்னத்தம்பி’ போன்ற தொடர்களிலும் நடித்தார். மேலும் ‘கலக்கப்போவது யாரு’, ‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது ‘விக்ரம்’, ‘விருமன்’, ‘சர்தார்’, ‘தலைவன் தலைவி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திலும் நடித்து வருகிறார். தற்போது வியட்நாமில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள அவர், அங்குள்ள அம்யூஸ்மென்ட் பார்க்-ல் ஆமை சிலை முன் எடுத்த போட்டோஸ் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications