Home / Photos
கல்யாண கோலத்தில் மைனா நந்தினி.. என்ன கேள்வி கேட்டார் தெரியுமா?
By Divya Bala
வெண்ணிலா கபடி குழு படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை நந்தினி. இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/6
Photo Credit: Instagram
Share
மைனா நந்தினி இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தார். “மலரு புள்ள” என்ற வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த கதாபாத்திரமே அவருக்கு திரையுலகில் நல்ல அறிமுகத்தை பெற்றுத் தந்தது.
2/6
Photo Credit: Instagram
Share
அதனைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளைக்காரத்துரை, ரோமியோ ஜூலியட், நம்ம வீட்டு பிள்ளை, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
3/6
Photo Credit: Instagram
Share
திரைப்படங்களுடன் சின்னத்திரையிலும் மைனா நந்தினி தனது தடத்தை பதித்தார். 2016ஆம் ஆண்டு ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் மடோனா கதாபாத்திரத்தில் நடித்தது அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
4/6
Photo Credit: Instagram
Share
அதனைத் தொடர்ந்து அமுதா ஒரு ஆச்சரிய குறி, பாண்டியன் ஸ்டோர்ஸ், அரண்மனை கிளி, சின்னத்தம்பி போன்ற தொடர்களிலும் நடித்தார். மேலும் கலக்கப்போவது யாரு மற்றும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
5/6
Photo Credit: Instagram
Share
அதன் பின்னர் மீண்டும் திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்ற அவர், விக்ரம், விருமன், சர்தார், தலைவன் தலைவி போன்ற படங்களில் நடித்தார். மூக்குத்தி அம்மன் 2ல் தற்போது நடித்து வருகிறார்.
6/6
Photo Credit: Instagram
Share
தனது சொந்த யூடுப் சேனலில் வெப் தொடர்கள், இன்டெர்வியு, போட்காஸ்ட் என பிசியாக இருந்தாலும் போட்டோஷூட்களும் செய்து வருகிறார்.அந்தவகையில் தற்போது கிறிஸ்துவ முறைப்படி கல்யாண கோலத்தில் கவுன் அணிந்து கணவருடன் ஜோடியாக போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு "கல்யாணம் பண்ணிக்கலாமா யோகி?' என கேள்வியையும் எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications