Home / Photos
பிக் பாஸ்ல பாத்தது.. கிளாமர் குயின் நமீதா இப்போ எப்படி இருக்காங்க? என்ன பண்றாங்க தெரியுமா?
By Chandru
இளைஞர்களின் கனவுக்கன்னி நமீதா இப்போ என்ன பண்றாங்க? படங்களில் நடிக்கிறாங்களா? உள்ளிட்ட முழு விபரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
1/9
Photo Credit: instagram
Share
17-வது வயதிலேயே மாடலிங் மூலம் கிளாமர் காட்ட தொடங்கியவர் நடிகை நமீதா. இதன் மூலம் 1998ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சூரத் அழகி போட்டியில் பங்கேற்று முதல் இடத்தை தடித்தூக்கினார். மாடலிங் துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட நமீதாவுக்கு தொடர்ந்து ஏகப்பட்ட விளம்பர படங்கள் தேடி வர தொடங்கியது.
2/9
Photo Credit: instagram
Share
இதன் மூலம் தொலைக்காட்சி விளம்பரங்களில் மாடலாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். யாருப்பா இந்த பொண்ணு என இளைஞர்கள் வலை போட்டு தேட தொடங்கினர். விளம்பரகங்ளில் கிடைத்த வரவேற்பு வெள்ளைத்திரையில் எதிரொலித்து. தெலுங்கு சினிமாவில் நடிக்க நமீதாவுக்கு அழைப்புதல் வந்தது.
3/9
Photo Credit: instagram
Share
தெலுங்கு படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த நமீதாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ஏகப்பட்ட தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து நட்சத்திர நடிகையாக ஜொலிக்க தொடங்கினார். அதன்பின்னர் தெலுங்கில் இருந்து தமிழ் சினிமா பக்கம் திருப்பினார்.
4/9
Photo Credit: instagram
Share
விஜயகாந்தின் 'எங்கள் அண்ணா' படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கை போலவே தமிழிலும் அமோக வரவேற்பு கிடைத்து. தொடர்ந்து சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளையே ஓரம் காட்டினார்.
5/9
Photo Credit: instagram
Share
கவர்ச்சி காட்டி நடித்து ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் திடுக்கிட செய்தவர். கிளாமர் காட்டுவதில் இவரை அடுச்சுக்க ஆளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கவர்ச்சியில் கலக்கினார். அதேபோல் இவரின் கவர்ச்சியில் மயங்கிடாத ஆளே இல்லை என சொல்லலாம். தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய முழுவதும் இவருக்கு மவுசு அதிகமானது.
6/9
Photo Credit: instagram
Share
திரைப்படங்களை தொடர்ந்து தொலைக்காட்சிகளும் அவ்வப்போது தென்பட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். அதிலும் ஹாய் மச்சான்ஸ் என்று ரசிகர்களை அன்போடு அழைப்பது அனைவர்க்கும் மிகவும் பிடிக்கும். இப்படியாக கிளாமர் நாயகியாக வலம் வந்த நமீதாவுக்கு ஒரு கட்டத்தில் போதிய படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களை குஷிப்படுத்தினார்.
7/9
Photo Credit: instagram
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒன்றும் கிடைக்கவில்லை. அதற்கு பதில் ஏராளமான டிவி ஷோக்கள் தான் கிடைத்தது. இது ஒருபக்கம் இருக்க நமீதா அரசியலிலும் கால்பதித்தார். தமிழ்நாடு பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
8/9
Photo Credit: instagram
Share
பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நமீதாவுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை இதனால் தொழிலதிபர் வீரேந்திர செளத்ரி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலக்கிக்கொண்டு வெறும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.
9/9
Photo Credit: instagram
Share
அதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். இது ஒருபக்கம் இருக்க தனது குழந்தைகள் கணவருடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஒரு காலத்தில் கவர்ச்சி கடலாக இளைஞர்களை ஈர்த்த நமீதா தற்போது குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications