Home / Photos
ப்ளாக் அவுட்பிட்டில் நச் ஸ்டில்ஸ்.. நடிகை ப்ரணிதாவின் கலக்கல் போட்டோஸ்!
By Divya Bala
தென்னிந்திய நடிகைகளில் முக்கிய நடிகை பிரனிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் தற்போது எடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை பிரனீதா சுபாஷ் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
2/7
Photo Credit: Instagram
Share
சூர்யா நடிப்பில் மாஸ் படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் நான் அவள் இல்லை பாடலால் மிகவும் பெயர் பெற்றார். 2010 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான போர்கியில் தர்ஷனுக்கு ஜோடியாக பிரணிதா அறிமுகமானார்.
3/7
Photo Credit: Instagram
Share
போர்க்கியின் வெற்றிக்குப் பிறகு, கன்னடப் படங்களில் இருந்து வந்த பல வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார், மேலும் அவர் சித்தார்த் ஜோடியாக நடித்த காதல் கதையான பாவா என்ற தெலுங்குப் படத்தில் நடிப்பதற்கு முன் வேறு படத்தில் கமிட் ஆனார்.
4/7
Photo Credit: Instagram
Share
படத்தில் தெலுங்கு கிராமத்து பெண்மணியாக நடித்ததற்காக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் அவர் அருள்நிதி நடித்த உதயன் என்ற தனது முதல் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.
5/7
Photo Credit: Instagram
Share
அதன் பின்னர் அவர் தனது இரண்டாவது தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார், இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. பின்னர் அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் ப்ரணிதா கவனம் செலுத்தினார். நடிப்பில் மட்டுமில்லாமல் தொழில் ரீதியாகவும் கலக்கி வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
மேலும் ஜோயாலுக்காஸ், எஸ்விபி சில்க்ஸ் சேலம், பாம்பே ஜூவல்லரி, வெலைட் அகாடமி ஆஃப் எஜுகேஷன், ஸ்ரீ லக்ஷ்மி ஜூவல்லரி, பாண்டிச்சேரி மற்றும் ஆர்எஸ் பிரதர்ஸ் போன்ற பிராண்டுகளுக்கு சுபாஷ் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications