Home / Photos
PHOTOS: நடிகை ப்ரீத்தா விஜயகுமாரை நியாபகம் இருக்கா? இவங்களுக்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா.. வியக்கும் நெட்டிசன்ஸ்!
By Chandru
பழம் பெரும் சினிமா நடிகர் விஜயகுமாரின் மகள் தான் நடிகை ப்ரீத்தா விஜயகுமார். கடந்த 1998 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சந்திப்போமா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
1/7
Photo Credit: instagram
Share
பழம் பெரும் சினிமா நடிகர் விஜயகுமாரின் மகள் தான் நடிகை ப்ரீத்தா விஜயகுமார். கடந்த 1998 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சந்திப்போமா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
2/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் 'ருக்மணி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து தான் தமிழ் சினிமாவில் ப்ரீத்தா கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
3/7
Photo Credit: instagram
Share
அதன்பின்னர் தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க விஜயகாந்த் நடித்த தர்மா, சத்யராஜ் நடித்த பொண்ணு வீட்டுக்காரன், ரஜினிக்கு மகளாக படையப்பா திரைப்படம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அனைத்திலும் சைடு கதாபாத்திரத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
4/7
Photo Credit: instagram
Share
மேலும் இதுவரை ப்ரீத்தா ஒரு டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததில்லை. முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வர தொடங்கினர். தமிழ் சினிமாவை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மொழி சினிமாக்களில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
5/7
Photo Credit: instagram
Share
போதிய திரைப்பட வாய்ப்புகளுடன் சினிமா உலகில் வலம் வந்த ப்ரீத்தா, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் ஹரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்திற்கு முன் இருவரும் சுமார் 3 வருடங்கள் காதலித்துள்ளனர்.
6/7
Photo Credit: instagram
Share
திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய ப்ரீத்தா குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்த காதல் ஜோடிக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் ப்ரீத்தா மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் ப்ரீத்தாவின் மூன்று மகன்களின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. காரணம் திருமணமாகி பல ஆண்டுகள் ஆனபோதும் இன்றும் இளமையாக இருக்கும் ப்ரீத்தாவுக்கு இவளவு பெரிய மகன்களை என்று ரசிகர்கள் வியப்பில் இருக்கின்றனர். தற்போது ப்ரீத்தாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications