90ஸ் கிளாமர் நடிகையா இவங்க? அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை மந்த்ரா.. போட்டோஸ் பாத்தீங்களா?
90களில் கிளாமர் காட்டி தென்னிந்திய சினிமாவையே பதறவைத்த நடிகை தற்போது எப்படி உள்ளார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை மந்த்ரா. குழந்தை நட்சத்திரமாக சுமார் 10க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். குறிப்பாக தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக மக்களை கவர்ந்த இவர், 'பிரியம்' என்ற தமிழ் படத்தின் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து ஹிந்தி உட்பட பல மொழி படங்களில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
தெலுங்கில் ராசி என்ற பெயரிலும் தமிழில் மந்த்ரா என்ற பெயரிலும் நடித்து வந்தார். தென்னிந்திய மொழி படங்கள் அனைத்திலும் ஹீரோயினாக நடித்து வந்தார். ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்த மந்த்ராவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. மார்க்கெட் குறைந்த மந்தரா கடந்த 2005ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீமுனியை காதல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் தலையை காட்டாமல் குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வந்தார். மேலும் இவருக்கு 10 வருடங்கள் கழித்தே குழந்தை பிறந்தது. பின்னர் மீண்டும் சினிமாவில் ஆக்ட்டிவாக இருக்கத் தொடங்கினார்.
சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர், கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார். 2013ல் இருந்து தற்போது வரை தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழில் சிம்புவின் வாலு, ஜீவாவின் கவலை வேண்டாம், உசுரே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து வெவ்வேறு படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மந்த்ராவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
90களில் தென்னிந்திய சினிமாவை கலக்கிய கிளாமர் நடிகையா இவங்க? இப்போ ஆளே டோட்டலா மாறிட்டாங்களே என மந்த்ராவின் சமீபத்திய புகைப்படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது ராசி மந்த்ராவின் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications