Home / Photos
விளக்கேற்றி தொடங்கிய புதிய பட பூஜை.. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரச்சிதா மகாலட்சுமி!
By Divya Bala
நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
சின்னத்திரையில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் ரச்சிதா மகாலட்சுமி. விஜய், சன், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களின் மூலம் அவர் பிரபலமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
குறிப்பாக சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரச்சிதாவின் புகழ் உச்சத்தை எட்டியது. அந்த கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
3/5
Photo Credit: Instagram
Share
சின்னத்திரையில் வெற்றிகரமாக வலம் வந்த அவர், தற்போது வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபிக்கும் முயற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக புதிய படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.
4/5
Photo Credit: Instagram
Share
அதேபோல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் அவரது ரசிகர் பட்டாளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
5/5
Photo Credit: Instagram
Share
இந்த நிலையில், ரச்சிதா புதிய படம் ஒன்றின் பூஜை விழாவில் கலந்துகொண்டு விளக்கேற்றிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் வாழ்த்துகளையும் லைக்குகளையும் குவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications