Home / Photos
பிக்பாஸ் ரைசா வில்சனா இது? ஆளே மாறிட்டாங்களே.. அசத்தல் லுக் இதோ!
By Divya Bala
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். தற்போது ரைசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
ரைசா வில்சன், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
அதன்பின் பெரிய வாய்ப்புகள் இல்லாத நிலையில், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சுமார் 63 நாட்கள் அந்த வீட்டில் இருந்து, தனது இயல்பான நடத்தை மூலம் மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஹரிஷ் கல்யாண் உடன் நடித்த பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்தார். இளம் ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று, ரைசாவின் பிரபலத்தையும் உயர்த்தியது.
4/5
Photo Credit: Instagram
Share
பின்னர் தனுசு ராசி நேயர்களே படத்தில் காமியோ தோற்றத்தில் நடித்தார். தொடர்ந்து பொய்க்கால் குதிரை, காபி வித் காதல், ஆலிஸ், காதலிக்க யாருமில்லை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமான ரைசா, தற்போது பல பட வாய்ப்புகளுடன் பிஸியாக உள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது ஸ்டன்னிங் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications