Home / Photos
PHOTOS : யார் இது? ரம்பாவுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..
By Chandru
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தனது திரை பயணத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த ரம்பா, 90களில் ஆரம்பம் முதல் 2000 இறுதி வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
1/6
Photo Credit: instagram
Share
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தனது திரை பயணத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த ரம்பா, 90களில் ஆரம்பம் முதல் 2000 இறுதி வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
2/6
Photo Credit: instagram
Share
தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரம்பா, 'உழவன்' என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். பின்னர் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
3/6
Photo Credit: instagram
Share
தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், அருணாச்சலம், ஜானகிராமன், காதலா காதலா, தேசிய கீதம், காதலர் தினம் என தமிழில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆரம்பம் முதலே கவர்ச்சி காட்டி நடித்த ரம்பா, 'அழகிய லைலா' பாடல் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர்.
4/6
Photo Credit: instagram
Share
தமிழில் அசைக்க முடியாத இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த ரம்பா, இறுதியாக 2010 ஆம் ஆண்டு வெளியான பெண் சிங்கம் படத்தில் நடித்திருந்தார். முன்னணி நாயகியாக வலம் வந்த ரம்பா கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டார்.
5/6
Photo Credit: instagram
Share
இவர்களின் திருமணம் கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமலையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இந்த தம்பதிகள் டொராண்டோவில் குடியேறி விட்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
6/6
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் ரம்பாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. மேலும் ரம்பாவின் மூத்தமகளின் புகைப்படத்தை பார்த்து ரசாகர்கள் ஆச்சிரியத்தில் மூழ்கியுள்ளனர். உங்களுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்காங்களா என வியந்துபோயினர்.


Click it and Unblock the Notifications