அடங்க மறு,அயோத்தி , சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் அவர் நடித்துள்ளார். இதனால் இவர் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அரண்மனை 4 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. ஹிந்தியில் அறிமுகமான ராஷி பல வருடங்கள் கழித்து மீண்டும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ராஷி. சமீபத்தில் இவர் நடித்த தெலுசுகடா படம் தெலுங்கில் வெளியாகியது.