Home / Photos
கல்யாணம் மட்டுமில்ல சங்கீத் கூட.. ரஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா பிக்ஸ்!
By Divya Bala
நடிகை ரஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்டா திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அவர்கள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
1/6
Photo Credit: Instagram
Share
நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா கடந்த 26ஆம் தேதி உதய்பூர் நகரில் நெருக்கமான குடும்பத்தினரின் முன்னிலையில் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். திருமண புகைப்படங்கள் வெளியாகியவுடன், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளன.
2/6
Photo Credit: Instagram
Share
காலையில் தெலுங்கு மரபுப்படியும், மாலை கொடவா பாரம்பரியத்தின்படியும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவின் கூர்க் பகுதியை சேர்ந்த ரஷ்மிகாவின் கலாச்சாரத்தை மதித்து இந்த இரு மரபுகளும் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
3/6
Photo Credit: Instagram
Share
உதய்பூரில் உள்ள மாளிகையில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை. அதனால் நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்காக மார்ச் 4ஆம் தேதி தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் ரிசெப்ஷன் நடைபெற உள்ளது.
4/6
Photo Credit: Instagram
Share
இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகியவுடன், ரசிகர்கள் மத்தியில் மில்லியன் கணக்கான லைக்குகளை குவித்தன. ரஷ்மிகாவை விட விஜய் தேவர்கொண்டாவின் மாப்பிள்ளை கோலம் பலரின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது.
5/6
Photo Credit: Instagram
Share
பார்த்த அனைவருக்கும் அது ஒரு ராஜா ராணி திருமணத்தை நினைவூட்டும் வகையில் பிரம்மாண்டமாக தோன்றியது.இவர்களின் திருமணத்தை முன்னிட்டு பல மாநிலங்களில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
6/6
Photo Credit: Instagram
Share
தற்போது விஜய் தேவர்கொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா தங்களது சங்கீத் நிகழ்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் மேலைநாடுகளின் பழைய ராஜா ராணி திருமணங்களை நினைவூட்டும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விஜய் தேவர்கொண்டா அணிந்திருந்த பாரம்பரிய உடை, அரச கம்பீரத்துடன் காட்சியளித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications