Home / Photos
காதலரை கரம்பிடித்த மாமன்னன் பட நடிகை ரவீனா ரவி.. மாப்பிள்ளை யாருன்னு பாத்தீங்களா? வெட்டிங் கிளிக்ஸ்!
By Chandru
டப்பிங் ஆர்டிஸ்டும், நடிகையுமான ரவீனா ரவி தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவரின் வெட்டிங் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@raveena ravi
Share
குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரவீனா ரவி. பின்னர் சாட்டை படத்தில் ஹீரோயினுக்கு டாப்பிங்க் கொடுத்து டப்பிங் கலைஞராக வலம் வர தொடங்கினார்.
2/7
Photo Credit: instagram@raveena ravi
Share
அமைரா தஸ்தூர், காஜல், எமி ஜாக்சன், மடோனா செபாஸ்டியன், மாளவிகா மோஹனன், ராசி கண்ணா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு தனது அழகான குரலில் டப்பிங் கொடுத்துள்ளார்.
3/7
Photo Credit: instagram@raveena ravi
Share
பிரபல டப்பிங் கலைஞராக வலம் வந்த ரவீனா, 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
4/7
Photo Credit: instagram@raveena ravi
Share
தொடர்ந்து ராக்கி, வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக 'மாமன்னன்' படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.
5/7
Photo Credit: instagram@raveena ravi
Share
தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்து வரும் ரவீனா, தனது நீண்ட நாள் காதலரான மலையாள இயக்குநர் தேவன் ஜெயக்குமாரை திருமணம் செய்துகொண்டார்.
6/7
Photo Credit: instagram@raveena ravi
Share
ரவீனாவின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், இருவீட்டார் குடும்பத்தினரும் மட்டுமே பங்கேற்றனர்.
7/7
Photo Credit: instagram@raveena ravi
Share
தற்போது ரவீனா ரவியின் திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியான நிலையில் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications