Home / Photos
இந்த நடிகருடன் ஜோடி சேர்கிறாரா? நடிகை ரெஜினா கசாண்ட்ரா.. பூஜையுடன் தொடங்கிய புதுப்படம்!
By Divya Bala
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இவரது புது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து படப்பிடிப்பு ஆரம்பம் ஆகியுள்ளது.
1/7
Share
இயக்குநர் மணிரத்தினத்திடம் அசிஸ்டண்டாக பணியாற்றிய பிரியா என்பவர் இயக்கிய 'கண்ட நாள் முதல்' என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இப்படம் இவருக்கு நல்ல அறிமுக படமாக அமைந்தது என சொல்லலாம்.
2/7
Share
முதல் படத்தில் சின்ன ரோலில் நடித்த ரெஜினாவுக்கு அடுத்த படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அழகிய அசுரா என்ற படத்தில் ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆனார்.
3/7
Share
தமிழில் ஹீரோயினாக அறிமுகமான அதே வேகத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தன்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திக்கொண்டார். சினிமா ரசிகர்களும் ரெஜினாவுக்கு அமோக வரவேற்பு கொடுத்து ஹீரோயினாக ஏற்றுக்கொண்டனர்.
4/7
Share
தமிழை காட்டிலும் ரெஜினாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். தமிழில் அவ்வப்போது மட்டும் தலையை காட்டி வந்தார்.
5/7
Share
அதன்படி சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், இயக்குநர் லோகேஷின் மாநகரம், உதயநிதியின் சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
6/7
Share
தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் கான்ஜுரிங் கண்ணப்பன். தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி, பார்டர், ஃப்ளாஸ் பாக் ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படியாக பல மொழி படங்களில் டாப் நடிகையாக வலம் வருகிறார் ரெஜினா
7/7
Share
இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் இந்தி படத்தில் நடிக்கவுள்ளார் ரெஜினார். இந்த படத்தின் கதாநாயகன் சன்னி தியோல் ஆகும். இந்த பட பூஜை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ரசிங்கர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications