Home / Photos
இதுதான் முதல் முறை.. யாரும் எதிர்பார்க்காத முடிவை அறிவித்த ரெஜினா!
By Divya Bala
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
மணிரத்னத்தின் உதவியாளரான பிரியா இயக்கிய கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரெஜினா கசாண்ட்ரா. முதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், அடுத்த படத்திலேயே ஹீரோயினாக உயர்ந்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
அழகிய அசுரா படத்தில் நாயகியாக நடித்த ரெஜினா, தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் ஹீரோயினாக அறிமுகமானார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழில் அவ்வப்போது மட்டுமே படங்களில் நடிக்கும் ரெஜினா, தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
4/5
Photo Credit: Instagram
Share
தற்போது தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்த ரெஜினா, காயமடைந்த மற்றும் ஆதரவற்ற விலங்குகளை மீட்டு வளர்ப்பது தனக்கும் தனது அம்மாவுக்கும் மிகவும் பிடித்த விஷயம் என தெரிவித்துள்ளார். பல விலங்குகளை தத்தெடுத்த அனுபவம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
இந்த நிலையில், முதல் முறையாக "மில்டன் கெய்ன்ஸ்" என்ற குதிரையை தத்தெடுத்துள்ளதாக ரெஜினா அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த அவருக்கு, ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications