Home / Photos
எப்படி பார்த்தாலும் க்யூட்டா இருக்காங்களே.. நடிகை சாய் பல்லவியின் ட்ரிப் போட்டோஸ்!
By Divya Bala
நடிகை சாய் பல்லவி, தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/6
Photo Credit: Instagram
Share
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இயல்பான நடிப்பும் எளிமையான தோற்றமும் மூலம் குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக உயர்ந்தார்.
2/6
Photo Credit: Instagram
Share
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அந்த ஒரு கதாபாத்திரமே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.
3/6
Photo Credit: Instagram
Share
அதன்பின் தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’ படம் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த அவர், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
4/6
Photo Credit: Instagram
Share
தமிழில் ‘மாரி 2’ படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடித்த சாய் பல்லவி, ‘ரௌடி பேபி’ பாடல் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து ‘என் ஜி கே’, ‘கார்க்கி’ உள்ளிட்ட படங்களிலும் தனது நடிப்பால் பாராட்டுகளை பெற்றார்.
5/6
Photo Credit: Instagram
Share
தற்போது இந்தியில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், சமீபத்தில் ஜப்பானிற்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
6/6
Photo Credit: Instagram
Share
அந்த புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள இடம் ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் உள்ள சப்போரோ நகரின் ‘சோசெய் ரிவர் பூங்கா’ ஆகும். பனியால் சூழப்பட்ட பல இடங்களில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது


Click it and Unblock the Notifications