Home / Photos
விஜயகாந்தின் 'வாஞ்சிநாதன்' பட நடிகையை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
By Chandru
விஜயகாந்த் பட நடிகை சாக்ஷி சிவானந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/6
Share
80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் தற்போது 90ஸ் நடிகை சாக்ஷி சிவானந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2/6
Share
90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் ஃபேவரைட் நாயகியாக வலம் வந்தவர் நடிகை சாக்ஷி சிவானந்த். 1997ம் ஆண்டு புதையல் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் மம்முட்டி, அரவிந்த் சாமி நடித்துள்ளனர்.
3/6
Share
இப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபு நடிப்பில் வெளியான மாப்பிள்ளை கௌண்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மக்களின் மனதில் ஓரளவுக்கு இடம் பிடித்த சாக்ஷி, விஜயகாந்துடன் நடித்து மிகவும் பாப்புலர் ஆனார்.
4/6
Share
விஜயகாந்த் நடிப்பில் வெளியான வாஞ்சிநாதன் படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார் சாக்ஷி சிவானந்த். தொடர்ந்து வேதம், மானஸ்தன் மற்றும் இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆதி பகவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் சினிமாவில் இருந்து விடைபெற்றார்.
5/6
Share
இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக அசத்தியுள்ளார். பல மொழி படங்களில் பிஸியாக வலம் வந்த சாக்ஷி, திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமாகிவிட்டார்.
6/6
Share
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து வெளியேறிய சாக்ஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications