'லோகா சாப்டர் 1' படத்தில் கேமியோ ரோலில் வந்து.. சைலண்ட் சம்பவம் செய்த மலையாள நடிகை யாருன்னு பாத்தீங்களா?
உலகளவில் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வரும் கல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா சாப்டர் 1: சந்திரா' படத்தில் சைலண்டாக சம்பவம் செய்த மலையாள நடிகை யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சூப்பர் ஹீரோ: நாம் எத்தனையோ ஹாலிவுட் சூப்பர் ஹீரோ திரைப்படங்களை பார்த்திருப்போம். அப்படியான மிரட்டலான படங்களை பார்த்த நமக்கு, இந்திய மொழிகளில் அந்தமாதிரியான படம் வராதா என்ற ஏக்கம் உண்டு. அப்படியே படம் வந்தாலும் அதில் ஆயிரெத்தெட்டு குறை கூறுவோம். தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு சில படங்கள் வெளியாகின. இருந்தும் அது சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாததால் அதன் மீதான முயற்சியை யாரும் எடுப்பதில்லை. ஆனால் மலையாள சினிமா 'மின்னல் முரளி' என்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தை உருவாக்கி அதில் வெற்றி கண்டது. அதன் தொடர்ச்சியாகவே லோகா படமும் உருவானது.
லோகா: இயக்குநர் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த ஃபேண்டஸி திரைப்படம் 'லோகா சாப்டர் 1: சந்திரா'. இப்படத்தில் சூப்பர் உமன் கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தியேட்டரில் ரிலீசான இப்படம் ஆரம்பத்தில் சினிமா ரசிகர்களை ஈர்க்க தவறியது. பின்னர் படத்தின் மீதான பாசிட்டிவ் விமர்சனங்கள் வர வர மக்களுக்கும் படத்தின் மீதான ஆர்வம் அதிகமானது. அப்புறம் என்ன தியேட்டரில் மக்கள் கூட்டம் அதிகமானது, ஷோக்களும் அதிகப்படுத்தப்பட்டன.
கலெக்ஷன்: உலகளவில் ரிலீஸான இப்படம் விமர்சனத்திலும் சரி, வசூலிலும் சரி மாபெரும் வெற்றி கண்டது. வெறும் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 19 நாள் முடிவில் உலகளவில் சுமார் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேமியோ ரோல்: லோகா படத்தின் மூலம் தனது முழு திறமையையும் களமிறக்கியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். ஆக்ஷன் காட்சிகள் மூலம் மக்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய கல்யாணி ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் கேமியோ ரோலில் வந்த மலையாள நடிகை ஒருவர் அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்துவிட்டார். யார் அந்த நடிகை தெரியுமா? வேற யாரும் இல்லை அப்படத்தின் துணை திரைக்கதை எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் தான்.
யார் அவர்? 2017ல் 'தரங்கம்' என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை சாந்தி பாலச்சந்திரன். தொடர்ந்து மலையாள சினிமாவில் பயணித்து வந்த இவர், Gulmohar என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து லோகா படத்தில் சம்பவம் செய்துள்ளார்.
சைலண்ட் சம்பவம்: லோகா படத்தில் துணை திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி வந்த இவர், சைலண்டாக கேமியோ ரோலில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்துவிட்டார். 'ஸ்வீட் காரம் காஃபி' என்ற வெப் தொடர் மூலம் தமிழ் ஆடியன்ஸின் கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லோகா படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகி வருகிறது. அப்படத்திலும் துணை திரைக்கதை எழுத்தாளராக பயணிப்பேன் என தெரிவித்துள்ளார். தற்போது நடிகை சாந்தி பாலச்சந்திரன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரல் நடிகையாக வலம் வருகிறார்.


Click it and Unblock the Notifications