Home / Photos
குந்தவையாக களமிறங்கிய ஷபானா.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!
By Divya Bala
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஷபானா. இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாவில் லைக்குகளை குவித்து வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்து வரும் பிரபல நடிகை ஷபானா ஷாஜஹான், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரின் மூலம் பெரும் பிரபலமடைந்தார். பார்வதி கதாபாத்திரம் அவருக்கு தனி அடையாளமாக அமைந்தது.
2/5
Photo Credit: Instagram
Share
செம்பருத்தி தொடருக்காக பல விருதுகளை பெற்ற ஷபானா, மக்கள் மத்தியில் அதிக ரசிகர்கள் கொண்டார். வேலைக்காரி கதாபாத்திரத்திலிருந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர்.
3/5
Photo Credit: Instagram
Share
2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் விஜயதசமி தொடரின் மூலம் சிறிய திரையில் அறிமுகமானார். 2021-ல், விஜய் டிவியில் பாக்கியலஷ்மி தொடரில் நடித்த ஆரியனை காதலித்து திருமணம் செய்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த ஷபானா, அந்த சீரியலை ரசிகர்கள் பெரிதும் விரும்ப காரணமாக இருந்தார். ஆனால், சமீபத்தில் அந்த தொடரிலிருந்து விலகி அனைவரையும் ஷாக் ஆக்கினார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் ஷபானா, குந்தவை வேடத்தில் கலந்துகொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications