நடிகை ஷிவானி நாராயணன்,  புடவையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.  சின்னத்திரையில் தனது கேரியரை தொடங்கியவர் நடிகை ஷிவானி நாராயணன். பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் இளைஞர்களிடமும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார்.பிக் பாஸ் பின் வெள்ளித்திரை வாய்ப்புகளை தேடிய இவர், கிளாமரஸ் லுக்கில் கவனம் செலுத்த தொடங்கினார். சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வந்தார்.இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோஷூட் படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய புகைப்படங்கள் எப்போதும் ரசிகர்களை ஈர்த்து வைரல் ஆகிறது.தற்போது புடவையில் க்யூட்டாக சிரிக்கும் ஷிவானி இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.