Home / Photos
photos: நீங்க மட்டும் இல்லங்க உங்க மனசு கூட க்யூட்ங்க.. சிம்பு பட நடிகையின் செயலால் புகழும் ரசிகர்கள்..
By Chandru
நடிகை சித்தி இட்னானி வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சித்தி இட்னானிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். தற்போது அவரின் செயலால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
1/7
Photo Credit: Instagram
Share
நடிகை சித்தி இட்னானி வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சித்தி இட்னானிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். தற்போது அவரின் செயலால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
2/7
Photo Credit: Instagram
Share
சிம்புவிற்கு இந்த வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சித்தி சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்ற ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ‘காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
3/7
Photo Credit: Instagram
Share
இவர் நூறு கோடி வானவில் என்ற படத்திலும் நடித்து வருகிறார். சித்தி இட்னானிக்கு பாடுவது என்றால் பிடிக்குமாம். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பாடல்களை பாடி பதிவிடுவார். அவர் அடிக்கடி போடோஸ்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நன்கு அறியப்படும் நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. இவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
இவர் மும்பையில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று பரிசுகள் வழங்கிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘‘நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம், உங்கள் நேரம். என்று பதிவிட்டுள்ளார்.
6/7
Photo Credit: Instagram
Share
சில புகைப்படங்களுடன் , லிட்டில் ஏஞ்சல்ஸில் உள்ள குழந்தைகளுடன் மதிய நேரத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பில்லாதது’’ என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவரைப் பாராட்டியுள்ளனர்.
7/7
Photo Credit: Instagram
Share
உண்மையில் குழந்தைகள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி அளப்பறியாதது. அவர்களுடன் சித்தி மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் பார்ப்பவர்களையும் மகிழ்ச்சி ஆக்குகிறது. இந்த மனசு யாருக்கு வரும் என ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications