Home / Photos
ஸ்டார் நடிகையா இருக்கும்போதே.. அதிகம் கிசுகிசுக்கப்பட்ட சிம்ரன்.. எந்தெந்த நடிகர்கள் கூட தெரியுமா?
By Chandru
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன் செம பீக்கில் இருந்தபோதே பிரபல ஸ்டார் நடிகர்களுடன் கிசுகிசுக்க பட்டர். யார் அந்த நடிகர்கள்? எதனால் கிசுகிசுக்கப்பட்டார்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Share
சிம்ரனை பிடிக்காதவர்கள் இருக்கமுடியுமா. 90ஸ் காலகட்டத்தில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துக்கொண்டவர் சிம்ரன். வசீகரிக்கும் அழகு, கவர்ச்சியான உடலமைப்பு இப்படி இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர், சிம்ரன்.
2/7
Share
விஐபி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலிருந்தே சிம்ரனுக்கு அமோக வரவேற்பு கிடைக்க தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். அஜித், விஜய், கமல், விக்ரம், அப்பாஸ், முரளி இப்படியாக தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
3/7
Share
ஜோதிகா, மீனா, சினேகா உள்ளிட்ட டாப் நடிகைகள் இருந்தாலும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவிக்கொண்டு முன்னணி நடிகையாக ஜொலித்து வந்தார். சினிமாவில் பிரபலம் ஆகிவிட்டால் போதும் நடிகர், நடிகைகளின் மீது அவதூறான கருத்துக்களை சொல்வதற்கென்றே தனி கூட்டம் உள்ளது.
4/7
Share
அதேபோல் நடிகைகளின் மீது கிசுகிசுக்களை பரப்பிவிடுவதும் என பல வேலைகள் நடக்கும். அப்படியாகத்தான் சினிமாவில் செம பீக்கில் இருந்த சிம்ரன் மீது பல கிசுகிசுக்கள் முன்வைக்கப்பட்டது. அந்தவகையில் எந்தெந்த நடிகர்களுடன் சிம்ரன் கிசுகிசுக்கப்பட்டார். அது உண்மையா இல்லை பொய்யானவையா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
5/7
Share
முதல் கிசுகிசு: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஸ்டார் நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். விஐபி படத்தில் அப்பாஸுடன் சேர்ந்து நடித்தார் சிம்ரன். அப்போது இருவருக்குள்ளும் ரகசிய உறவு உள்ளது. இருவரும் காதலிக்கின்றனர் என்றெல்லாம் கிசுகிசுக்கள் எழுந்தன. இதனால் ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து படம் நடிப்பதை கூட நிறுத்திக்கொண்டனர்.
6/7
Share
இரண்டாம் கிசுகிசு: நடிகர் பிரபு தேவாவின் அண்ணன் ராஜு சுந்தரத்துடன் கிசுகிசுக்கப்பட்டார் சிம்ரன். இருவரும் நீண்ட நாள் காதலித்து வருகின்றனர் என சொல்லப்பட்டது. ஒருகட்டத்தில் இருவரும் ரகசிய திருமணம் சேர்த்துக்கொண்டனர் எனவும் பேசப்பட்டது. அந்த சூழ்நிலையில் தான் பிரபு தேவாவும் காதல் விவகாரத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வந்தார். இறுதியில் சிம்ரனும்-ராஜு சுந்தரமும் தங்களது காதல் வாழ்க்கையை முறித்துக்கொண்டனர் என சொல்லப்பட்டது.
7/7
Share
மூன்றாம் கிசுகிசு: பம்மல் கே சம்பந்தம் மற்றும் பஞ்சதந்திரம் படத்தில் ஜோடியாக நடித்து மக்களால் சூப்பர் ஜோடி என கொண்டாடப்பட்ட ஜோடி தான் சிம்ரன்-கமல் ஜோடி. இருவரும் ஒருவரின் மீது ஒருவர் காதல் வயப்பட்டு டேட்டிங் செய்து வருகின்றனர் என்றும் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகின்றனர் என்றும் கிசுகிசுக்கப்பட்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கமல் இது உண்மை இல்லை என மறுத்துவிட்டார். இப்படி பல தடைகளை தண்டி சினிமாவில் ஜொலித்த சிம்ரன் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications