Home / Photos
14 வருட திருமண வாழ்க்கை.. இப்படியும் காதலிக்க முடியுமா? நெகிழ வைத்த நட்சத்திர தம்பதி!
By Divya Bala
நடிகை ஸ்நேகா மற்றும் நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளில் ஒருவர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள், தற்போது தங்களின் 14வது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/6
Photo Credit: Instagram
Share
நடிகை ஸ்நேகா தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். மலையாளத்தில் அறிமுகமான அவர், என்னவளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
2/6
Photo Credit: Instagram
Share
நடிகர் பிரசன்னா, ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தொடர்ந்து ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த அவர், தமிழ் ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்துள்ளார்.
3/6
Photo Credit: Instagram
Share
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தபோது ஸ்நேகா - பிரசன்னா இடையே காதல் மலர்ந்தது. பின்னர் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, தற்போது தங்களின் 14வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
4/6
Photo Credit: Instagram
Share
திருமண நாளை முன்னிட்டு பிரசன்னா தனது பதிவில், “வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பமும் நம்மை இன்னும் நெருக்கமாக்கியது. சாதாரண நாட்களையே அழகான நினைவுகளாக மாற்றிவிட்டோம்” என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.
5/6
Photo Credit: Instagram
Share
மேலும், “எப்போதும் என் வலது கையை பிடித்துக்கொண்டு நடப்பதால், நடிகர் மோகன்லால் போல தோள்பட்டை சாய்ந்த தோற்றம் வந்துவிடும்” என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். இந்த பதிவு ரசிகர்களிடையே அதிகம் கவனம் பெற்றுள்ளது
6/6
Photo Credit: Instagram
Share
அதேபோல் ஸ்நேகா தனது பதிவில், “சந்தோஷம், சவால், சண்டை, சிரிப்பு என அனைத்தையும் ஒன்றாக கடந்து வந்தோம். 14 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒருவரை ஒருவர் தேர்வு செய்து வாழ்வதே மிகப்பெரிய காதல்” என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டிருந்தார். தற்போது இந்த ஜோடியின் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications