Home / Photos
வசீகரிக்கும் அழகு தேவதையாய்.. நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
நடிகை ஸ்ரீதேவி வெகு காலத்திற்கு பிறகு, மீண்டும் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/7
Photo Credit: Instagram
Share
சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இப்பவும் இருக்கிறது. திரையில் தலைகாட்டாத ஸ்ரீதேவி மீண்டும் விஜய் டிவியில் நடுவராக நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
2/7
Photo Credit: Instagram
Share
தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். இவர் ரிக்ஷா மாமா படத்தில் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு அதே வருடத்தில் 5 படத்தில் கமிட் ஆகி நடித்தார்.
3/7
Photo Credit: Instagram
Share
தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஸ்ரீதேவி தமிழில் நடிகையாக 2002ல் அறிமுகமானார். காதல் வைரஸ் என்ற படத்தில் அறிமுகமான ஸ்ரீதேவிக்கு பெரிதாக அந்த படம் போகவில்லை.
4/7
Photo Credit: Instagram
Share
அதன் பிறகு ஜோதிகா மாதவன் நடித்த பிரியமான தோழி படத்தில் துணை நாயகியாக நடித்தார். ஜூலி என்ற கதாபாத்திரத்தில் அவருக்கு ஜோடியாக வினித் நடிக்க இந்த படத்தின் மூலம் அவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
5/7
Photo Credit: Instagram
Share
தித்திக்குதே படத்தில் ஜீவாவுடன் நடித்தார் ஸ்ரீதேவி. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். அதன் பிறகு தெலுங்கில் நின் இஸ்டபட்னு என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்காகவும் சிறந்த நடிகை விருதை வென்றார்.
6/7
Photo Credit: Instagram
Share
கன்னடா, தெலுங்கு என மாறி மாறி படங்களில் வரிசையாக நடித்தார். தமிழில் கதாநாயகியாக 4 படங்களில் நடித்த ஸ்ரீதேவி அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. தனுசுடன் தேவதையை கண்டேன் படத்தில் நடித்ததே அவரது கடைசி தமிழ் படமாகும்.
7/7
Photo Credit: Instagram
Share
ராகுல் என்பவரை திருமணம் செய்த ஸ்ரீதேவி 10 வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சிகளில் நடுவராக வர ஆரம்பித்தார். தெலுங்கில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி தற்போது விஜய் டிவியில் ஜோடி ஆர் யு ரெடி என்ற நடன நிகழ்ச்சிக்கு நடுவராக உள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தி கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications