Home / Photos
சீரியல் ஷூட்டிங்கிற்கு பிரேக்.. வெளிநாட்டில் ஜாலியாக இருக்கும் சுஜிதா!
By Divya Bala
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் தனம் கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை சுஜிதா, தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களால் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறார்.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடம்பிடித்தவர் நடிகை சுஜிதா. குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவான இந்த சீரியல், யதார்த்தமான கதைக்களத்தால் பெரும் வரவேற்பை பெற்றது.
2/5
Photo Credit: Instagram
Share
இந்த தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதா, சின்னத்திரை ரசிகர்களிடையே மிகப்பெரிய பிரபலமாக மாறினார். தமிழில் வெற்றி பெற்ற இந்த சீரியல், பின்னர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழை தொடர்ந்து தெலுங்கில் ‘வதினம்மா’ என்ற தொடரிலும் அண்ணி கதாபாத்திரத்தில் சுஜிதா நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
4/5
Photo Credit: Instagram
Share
சின்ன வயதிலிருந்தே நடித்து வரும் சுஜிதா, சினிமாவை விட சீரியல்கள் மூலமாகவே மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்தார். விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் நடிகை மாளவிகாவுக்கு பின்னணி குரலும் கொடுத்திருந்தார்.
5/5
Photo Credit: Instagram
Share
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுஜிதா, தற்போது வியட்நாம் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications