Home / Photos
PHOTOS: 50 வயதாகும் 'சின்ன கவுண்டர்' பட நாயகியா இது? ஆளே டோட்டலா மாறிட்டாங்களே.. யாருன்னு பாத்தீங்களா!
By Chandru
80s actress Sukanya latest photos goes viral on social media. check out the latest clicks here.
1/8
Photo Credit: instagram
Share
1991 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 'புது நெல்லு புது நாத்து' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சுகன்யா. அதன்பின்னர் தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
2/8
Photo Credit: instagram
Share
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். தொடர்ந்து கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார்.
3/8
Photo Credit: instagram
Share
அதேபோல் செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், தாலாட்டு, கேப்டன், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், கோட்டைவாசல் உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
4/8
Photo Credit: instagram
Share
இன்னும்சொல்லபோனால் லேடி கமல் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் டாப் டக்கர் நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் திருமணம்.
5/8
Photo Credit: instagram
Share
திரைப்படங்களை தாண்டி சன் டிவி, ராஜ் டிவி, டிடி பொதிகை, ஜீ தமிழ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல் சில மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் வெள்ளித்திரை வாய்ப்புகளை குறைத்துக்கொண்டு சின்னத்திரையில் முழு நேர நடிகையாகவே மாறிவிட்டார்.
6/8
Photo Credit: instagram
Share
சினிமா உலகில் செம்ம பீக்கில் இருந்தபோது ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் செட்டிலான சுகன்யாவின் திருமண வாழ்க்கைக்குள் என்னாச்சோ ஓராண்டிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
7/8
Photo Credit: instagram
Share
விவாகரத்து பின் தனது மகளுடன் தனியாக வசித்து வந்த சுகன்யா இன்ஸ்டகிராமில் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள், வெகேஷன் செல்லும் புகைப்படங்கள் என விதவிதமான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் சுகன்யாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துள்ளது. அடடே நம்ம சுகன்யாவா இது என்று ரசிகர்கள் ஏகப்பட்ட கமண்டுகளுடன் புகைப்படத்தை வைரல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications