Home / Photos
43 வயதாகும் சத்யராஜ் பட நடிகையா இது? இளமை மாறாமல் யூத்ஃபுல் லுக்கில் இருக்கும் சுனிதா வர்மா.. இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
By Chandru
சத்யராஜ் பட நடிகை சுனிதா வர்மாவின் ரீசென்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/9
Photo Credit: instagram
Share
எத்தனையோ பிற மொழி நடிகைகள் தமிழ் சினிமாவில் தஞ்சமடைந்து ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு மிகவும் பாப்புலராகி இங்கவே செட்டிலானவர்கள் உண்டு. இருப்பினும் இதில் சிலர் பாப்புலர் ஆகியும் நல்ல நேரம் கைக்கூடாததால் பட வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் சொந்த ஊருக்கே மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு சென்றவர்களும் உண்டு.
2/9
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தமிழ் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஒருவரை பற்றி தான் பார்க்கப்போகிறோம். கடந்த 2001ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை சுனிதா வர்மா.
3/9
Photo Credit: instagram
Share
முதல் படத்திலிருந்தே தெலுங்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுக்க தொடர்ந்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ஸ்டார் நடிகையாக வலம் வந்த சுனிதாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க ஆசை போல.
4/9
Photo Credit: instagram
Share
அதன்படி கடந்த 2004ம் ஆண்டு ஒரு முறை சொல்லிவிடு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் சுனிதா வர்மா. இப்படத்தை தொடர்ந்து அடுத்து வருடமே மீண்டும் ஒரு பட வாய்ப்பு கிடைத்து. இம்முறை ஸ்டார் நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
5/9
Photo Credit: instagram
Share
ஆதாவது நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான 6'2 என்ற படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சுனிதாவையும் மக்கள் ரசிக்க தொடங்கினர்.
6/9
Photo Credit: instagram
Share
தொடர்ந்து இருவர் மட்டும், பிறகு மற்றும் கருங்காலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களின் பிடித்த நடிகையாக வலம் வந்தாலும் எனோ தெரியவில்லை தமிழில் சரியன பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தார்.
7/9
Photo Credit: instagram
Share
தமிழ் படம் இல்லைனா என்ன என்று பிற மொழி படங்கள் இருக்கே என சுனிதா பிற மொழிகளில் கலக்கி வந்தார். அதன்படி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களில் ஸ்டார் நடிகையாக வலம் வந்தார். இப்படி பல மொழி படங்களில் கலக்கிய சுனிதா ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து டோட்டலாக விலகிக்கொண்டார்.
8/9
Photo Credit: instagram
Share
சினிமாவில் இருந்து விலகிய சுனிதா சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது டூர் செல்லும் புகைப்படங்களை ஷேர் செய்வதும், விதவிதமான உடையில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாவில் போஸ்ட் போடுவதும் என சோசியல் மீடியாக்களில் பிஸியாக இருந்து வருகிறார்.
9/9
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் தற்போது 43 வயதாகும் சுனிதாவின் ரீசென்ட் புகைப்படம் தான் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வயசிலும் இளமை மாறாமல், அழகு குறையாமல் செம யங்காக இருக்கும் சுனிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications