Home / Photos
இவங்க தம்பியா இது? குடும்பத்தோடு க்யூட்டாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை..
By Divya Bala
ஈரமான ரோஜாவே 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றவர் ஸ்வாதி. இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்வாதி கொண்டே. இயல்பான நடிப்பு மற்றும் அழகான முகபாவனைகளால் குறுகிய காலத்திலேயே சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
கர்நாடகாவை பூர்விகமாகக் கொண்ட ஸ்வாதி, தனது கலைப்பயணத்தை கன்னட திரைப்படங்கள் மூலம் தொடங்கினார். அதன் பின்னர் தமிழ் சீரியல்களில் வாய்ப்பு பெற்று, தற்போது இளம் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
கன்னடத்தில் சில படங்களில் நடித்த பிறகு, ‘யாரிவலு’ சீரியல் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார் ஸ்வாதி கொண்டே. அதன் பின்னர் தமிழ் சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்து, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
‘ஈரமான ரோஜாவே 2’ தொடரில் பிரியா கதாபாத்திரம் மூலம் பிரபலமான இவர், தற்போது சன் டிவியின் ‘மூன்று முடிச்சு’ சீரியலிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது வெளியிடும் ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது குடும்ப விழாவில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்வாதி, அம்மா மற்றும் தம்பியுடன் கொடுத்த க்யூட் போஸ்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். குறிப்பாக தம்பி தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி, “ஸ்வாதியை விட தம்பியே செம்ம க்யூட்!” என ஸ்வாதிக்கு மட்டுமில்லாமல் அவரது தம்பிக்கும் ரசிகர்கள் ஐஸ் வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications