நடிகை ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன் சில படங்களிலேயே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் தனித்த இடத்தை பிடித்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
புதுயுகம் டிவியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய இவர், பின்னர் மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியான ‘ஹாஃப் பாயில்’ வெப் சீரிஸின் மூலம் இளைஞர்களிடையே அதிக கவனம் பெற்றார்.
அதன் பிறகு ‘சவரகத்தி’, ‘கீ’, ‘ஜாடா’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் ஆழமான இடம் பிடித்தார்.
‘விக்ரம்’ படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தபோதும், ஸ்வாதிஷ்டாவின் நடிப்பு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் பின்னர் தொடர்ந்து சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.