Home / Photos
ஸ்டன்னிங் லுக்கில் கலக்கும் 'விக்ரம்' பட நாயகி.. லைக்குகளை குவிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
By Divya Bala
நடிகை ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துவிட்டார். இவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துள்ளது.
1/7
Photo Credit: Instagram
Share
விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக நடித்து படு பயங்கரமாக ட்ரெண்ட் ஆனவர் ஸ்வாதிஷ்டா. இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். இவர் நடிப்பில் சமீபத்தில் கன்னடத்தில் வெளியான படம் ஒண்டு சரள பிரேமா கதா படம் அவரை அடுத்த லெவெல்க்கு எடுத்து சென்றது.
2/7
Photo Credit: Instagram
Share
இவர் மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியான வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க, இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின்னர் ஸ்வாதிஷ்டா அதே தொடரில் ஹீரோயினாக நடித்து இளைஞர்களின் மனதை இடத்தை பிடித்தார். ஸ்வாதிஷ்டாவுக்கு ஒரு சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்து.
3/7
Photo Credit: Instagram
Share
சவரகத்தி, கீ ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வழங்கினார். சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இளைஞர்களின் மனதில் நச்சென்று பதிந்துவிட்டார். படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வாதிஷ்டாவுக்கு, கமல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
4/7
Photo Credit: Instagram
Share
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம்' . இப்படத்திலும் ஸ்வாதிஷ்டாவுக்கு சிறப்பு தோற்றமே கிடைத்தது. விக்ரம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ஸ்வாதிஷ்டாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சானது.
5/7
Photo Credit: Instagram
Share
தெலுங்கில் மியூசிக் வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். புதுயுகம் டிவியில் காம்பஸ் கவுண்டவுன் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், விடீயோக்கள் என வெளியிட்டு வருகிறார்
6/7
Photo Credit: Instagram
Share
யூடுப் புகழ் பெற்ற கோபி மற்றும் சுதாகருடன் இணைந்து 2017 இல் வெளியான ஹாஃப் பாயில் என்ற மெட்ராஸ் சென்ட்ரலின் வெப் சீரிஸில் நடித்தார். கீ படத்தில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஜாடா படத்தில் நடித்துள்ளார்.
7/7
Photo Credit: Instagram
Share
விக்ரம் படத்தை தொடர்ந்து கிடைத்த வரவேற்பால் மேலும் சில படங்களில் ஸ்வாதிஷ்டா பிஸியாக நடித்து வருகிறார். இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications